ஊடக அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துமாறு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நீதி அமைச்சரை கோருகிறது.
இலங்கையின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை, ஏனைய நாடுகளில் உள்ளதைப் போன்று ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அடிப்படைக் காரணங்கள் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் முன்மொழிவுகள் அடங்கிய தொகுப்பொன்றை இவ்வாரம் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அனுப்பி வைத்துள்ளது. நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில், நீண்ட காலமாக உணரப்படும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியத்தை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளது.
