தகவலறியூம் உரிமை ஆணைக்குழு

தகவலறியூம் உரிமை ஆணைக்குழு என்றால் என்ன?

+

சட்டத்தின் வினைத்திறன்மிக்க நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்காகஇ தகவலறியூம் உரிமை சட்டத்தின் கீழ் தகவலறியூம் உரிமை ஆணைக்குழுவானது நிறுவப்பட்டுள்ளது. ஆணைக்குழுவானது ஒரு சட்ட ஆளுமையைக் கொண்ட கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாகும். ஆகையால்இ ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரவூம் முடியூம் அத்துடன் அதற்கெதிராக வழக்குத் தொடரப்படவூம் முடியூம்.

ஆணைக்குழு சுயாதீனமானதா?

+

ஆம். இது ஒரு சுயாதீனமான ஆணைக்குழுவாகும். அதன் மூன்று உறுப்பினர்கள்இ எழுத்தாளர்கள்இ பதிப்பாளர்கள் மற்றும் ஊடகக் குழுக்கள்இ சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் அரசியலமைப்புப் பேரவைக்கு  பெயர் குறித்து அனுப்பப்பட்டவர்களாகவூம், எஞ்சிய இரு உறுப்பினர்களும் அரசியலமைப்புப் பேரவையால் ஒரு பகிரங்க விண்ணப்பச் செயன்முறை மூலம் தெரிவூ செய்யப்படுபவர்களாகவூம் இருப்பர்.

ஆணைக்குழு அதன் வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிறுவூம்?

+

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஆணைக்குழுவானது அதன் சகல நடவடிக்கைகளையூம் உள்வாங்கிய ஒரு அறிக்கையை குறைந்த பட்சம் ஆண்டிற்கொருமுறையாவது தயாரித்து வெளியிடும். அறிக்கையின் ஒரு பிரதி பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கப்படுவதுடன் இன்னொரு பிரதி சனாதிபதிக்கு அனுப்பப்படும். அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் (02) பின்னர் ஆணைக்குழுவானதுஇ அதன் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு பிரதியை வைத்திருக்க வேண்டும். முடியூமானபோதுஇ ஆணைக்குழுவானதுஇ அதன் இணையத்தளத்தில் இவ் அறிக்கையின் ஒரு பிரதியைப் பிரசுரிக்க வேண்டும்.

ஆணைககு;ழுவிடம் காணபப்டும் அதிகாரஙூகள் எவை?

+

ஆணைக்குழுவிற்கு:

(அ) செயல்முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் பொது அதிகார சபைகள் அவற்றினது   கடமைகளை சரிவர நிறைவேற்றகின்றனவா என்பதையூம்  உறுதிசெய்தல்

(ஆ) சீர்திருத்தத்திற்குப் பரிந்துரைகளை முன்வைத்தல்

(இ) இச்சட்டத்தின் கீழ் கட்டணத்தை விதித்துரைப்பதற்காக பொது அதிகார சபைகளை வழிநடாத்துவதற்காக,  நியாயத்தின்தை அடிப்படையில்யாகக் கொண்ட வழிகாட்டல் நெறிகளை  வெளியிடுதல்

(ஈ)  தகவல் அலுவலர் கட்டணம் அறவிடாது தகவல் வழங்கக் கூடிய சு+ழ்நிலைகளைப் பரிந்துரைத்தல்

(உ) கட்டண அட்டவணையைப் பரிந்துரைத்தல்

(ஊ) சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க அலுவலர்களுக்குப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

(எ) சட்டத்தின் கீழ் தனிநபர்களினது தேவைகள் மற்றும் உரிமைகளைப் பிரசித்தப்படுத்தல்

(ஏ) பதிவூகளை முறையாக முகாமை செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்குதல். ஆகியவற்றை மேற்கொள்ளும்.

ஆணைக்குழுவிடம் காணபப்டும் அதிகாரஙூக்ள் எவை?

+

ஆணைக்குழுவிற்கு:

(அ) விசாரணை செய்யவூம், ஆணைக்குழுவின் முன்னிலையில் எந்தவொரு நபரையூம் தோன்றுமாறு பணிக்கவூம்;

(ஆ) ஆணைக்குழு முன்னிலையில் தோன்றிய நபர்களைக் கேள்விக்குட்படுத்துவதற்கும் அவர்களிடம் காணப்படும் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு வேண்டுவதற்கும். கோரப்படும் தகவலானதுஇ சட்டத்தின் பிரகாரம்  வெளியிடுவது தடைசெய்யப்பட்டிருப்பின்இ அத்தகைய தகவலை ஆணைக்குழுவானது நம்பகமாக பரீட்சிக்க வேண்டும்;

(இ) பொது அதிகார சபையிடம் காணப்படும் எந்தவொரு தகவலையூம் பரீட்சிக்க

(ஈ)  தகவலை ஒரு குறித்த வடிவத்தில் வழங்குமாறு ஒரு பொது அதிகார சபையைப் பணிக்க

(உ)  ஒரு பொது அதிகார சபையினால்  மறுக்கப்பட்ட தகவலைப் பிரசுரிக்குமாறு குறித்தயைப் பணிக்க

(ஊ) மேன்முறையீடுகளைச் செவிமடுக்கவூம் தீர்மானிக்கவூம்@இ மற்றும்

(எ) உரிய நேரத்தில் தகவல் வழங்கப்படாதவிடத்து அறவிடப்பட்ட கட்டணங்களை மீளச் செலுத்துமாறு பொது அதிகார சபைகளைப் பணிக்க ஆணைக்குழுவூக்கு அதிகாரங்கள் காணப்படுகின்றது.

ஆணைக்குழுவானது தவறாளிகளுக்கெதிராக  நீதவான் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடருவதற்கான முக்கியமான அதிகாரத்தையூம் கொண்டுள்ளது.

ஆணைக்குழுவிற்கு எவ்வாறு நிதியளிக்கப்படும்?

+

ஆணைக்குழவிடம் அதனது சொந்தநிதி காணப்படுகின்றது. நிதியானதுஆணைக்குழுவிற்குப் பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படும் ஏதேனும் பணம் மற்றும் நன்கொடைகள்இ பரிசுகள் அல்லது ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்ற மானியங்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். நன்கொடைகள்இ பரிசுகள் அல்லது மானியங்களாக ஆணைக்குழுவிற்கு நிதி கிடைக்கப்பெறுகின்ற போது அத்தகைய நிதி மூலங்களையூம் என்ன நோக்கத்திற்காக குறித்த நிதி வழங்கப்பட்டது என்பதனையூம் பகிரங்கப்படுத்துவதற்கு ஆணைக்குழுவானது கடமைப்பட்டுள்ளது. ஆணைக்குழுவினது சகல செலவினங்களுக்கான கொடுப்பனவூகளும்  இந் நிதியிலிருந்து செலுத்தப்படும்.

ஆணைக்குழுவின் நிதிகள் கணக்காய்வூ செய்யப்படுமா?

+

ஆம். ஆணைக்குழுவின் வருமானங்களும் செலவூகளும் நிதிக் கணக்காய்வூக்கு உட்படுத்தப்படல் வேண்டும். ஆணைக்குழுவினது நிதியாண்டானது எந்தவொரு வருடத்தினதும் சனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியாகும். ஆணைக்குழுவானதுஇ அதன் சகல வருமானங்கள் மற்றும் செலவூகளைப் பிரதிபலிக்கும் முறையான கணக்குகளைப் பேணுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆணைக்குழுவின் கணக்குகளுக்கான கணக்காய்வானதுஇ பகிரங்கக் கூட்டுத்தாபனங்களின் கணக்குகளின் கணக்காய்வூ தொடர்பான அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம்இ மேற்கொள்ளப்பட வேண்டும். ஆணைக்குழுவின் நிதிக் கட்டுப்பாடும் கணக்குகளும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.