ஆர்ரிஐ இல் எஸ்எல்பிஐ இன் பங்காற்றல்

ஆர்ரிஐ இல் எஸ்எல்பிஐ இன் பங்காற்றல்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது (எஸ்எல்பிஐ), ஊடகம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வழிகாட்டுதல், தலைமைதாங்குதல் ஆகியவற்றுக்காக இலங்கை பத்திரிகை சமூகம், இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம்,சுதந்திர ஊடக அமைப்பு, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டது. 12வருட செயற்பாடுகளின் பின்னர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது இலங்கையின் முன்னணி ஊடக அபிவிருத்தி ஸ்தாபனமாக தன்னைதானே நிலைநிறுத்திக் கொண்டது. மேலும் இதில் நான்கு செயற்படு அங்கங்களான இலங்கை ஊடகவியல் கல்லூரி (Press Complaints Commission of Sri Lanka (PCCSL)) ஆதரவுவழங்கலும் சுதந்திர ஊடகப் பிரிவும் அத்துடன் ஊடக வள நிலையமும் (ஆசுஊ) இணைந்துள்ளது. இந்த ஸ்தாபனம் ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குகிறது.

சுயகட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் ஊக்கப்படுத்தவும், சரியான அறிக்கையிடலுக்கு அல்லது சவாலுக்கு வாசகர்களுக்கு இருக்கும் உரிமையை வழங்குவதற்காகவும் இலங்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவையும் (Pசநளள ஊழஅpடயiவெள ஊழஅஅளைளழைn ழக ளுசi டுயமெய (Pஊஊளுடு)) அதே நேரம், தொழில் வாண்மைமிக்க ஊடகவியலுக்காக திறனை விருத்தி செய்வதை மையப்படுத்தி பயிற்சியளிக்கும் அங்கமாக இலங்கை ஊடகவியல் கல்லூரியையும் ( ளுசi டுயமெய ஊழடடநபந ழக துழரசயெடளைஅ (ளுடுஊது)கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறலையும் பொறுப்பையும் கொண்டுள்ள ஊடகவியலாளர்களின் தொழில் வாண்மைமிக்க அலகு ஒன்றை உருவாக்கும் ஆணையைக் கொண்டுள்ளது.
ஏஸ்எல்பிஐ ஆனது நல்லாட்சி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபடுகிறது. பன்மைத்துவம், தொழில்வாண்மை, துடிப்பு மிக்க ஊடகம் அனுகூலமான வழியில் இந்த மாதிரியான விடயப் பரப்புகளை முன்வைக்க முடியும் என்பது சிறப்பாக நிறுவப்பட்ட உண்மையாகும். அதே நேரம் தவறாக இயங்கும் ஊடகம் இந்த மாதிரியான பார்வைகளை எதிர்க்கிறது. அதனால் 1998 ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனத்தின் மாற்றாக அதிலிருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை(சுவுஐ) கொண்டுவருவதற்காக வாதிடப்பட்டது. மீண்டும் 2008இல் பரிசீலிக்கப்பட்டது. இலங்கையில் நல்லாட்சியையும்; பேச்சுரிமைச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக இந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட பிரச்சாரம் எஸ்எல்பிஐ இனால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த பிரச்சாரத்தினூடாக எஸ்எல்பிஐ தகவல் அறியும் உரிமைச் சடட்டத்தை ஊக்குவிப்பதற்கு முயன்றது. குறிப்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கியதனூடாக அண்மையில் இலங்கை அரசினால் அது சட்டமாக்கப்பட்டது.