ஊடகமும் ஆர்ரிஐயும்

ஊடகமும் ஆர்ரிஐயும்

உண்மையான ஜனநாயகத்தின் சிறப்பான செயற்பாட்டிற்காக தகவலானது இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டதாகவுள்ளது. மக்கள் நடப்பு விவகாரங்கள், சமகாலப் பிரச்சினைகள் – அரசியல், சமூக, பொருளாதார குறிப்பாக மக்களின் வாழ்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கம் செலுத்தும் இந்தமாதிரியான பிரச்சினைகளைப் பற்றிய தகவலை அறிந்துவைத்திருப்பது அவர்களுக்கு தேவையாகவுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கான உண்மை, ஒழிவுமறைவற்ற தொடர்பாடலில் ஊடகவியலாளர்கள் மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளார்கள். எனவே மக்களிடையே ஆர்ரிஐ தொடர்பாக பரந்தளவிலான விழிப்புணர்வையும் புரிந்துகொள்ளலையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடமே உண்டு. எனவே துல்லியமான, சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும். தகவல் மூலங்கள், கட்டாயம் மறைக்கப்படாது எந்த நேரத்திலும் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

எப்போதும், ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகங்கள் அதிகாரசபைகளின் எதிர்மறையான பக்கத்தை வெளிப்படுத்துகின்ற தகவலாக இருந்தாலும்கூட அந்த விடயம் மக்களின் ஆர்வைத்தைக் கொண்டுள்ளது எனில் அதை வெளியிடுவதனூடாக அரசை பொறுப்புக்கூறச் செய்யவேண்டும். இவ்வாறு ஊடகம் ஜனநாயகத்திற்கும் பிரஜைகளுக்கும்; செயலாற்றுவதற்கு, புலனாய்வு ஊடகவியல் மிகப்பிரதான பங்களிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் மக்கள் நேரடியாகவோ தனிப்பட்ட ரீதியிலோ அவர்களது தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்ற இந்த உண்மையை கவனத்தில் எடுத்தால், புலனாய்வு ஊடகவியலின் தனிச்சிறப்பு அது எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவம் உடையதாகிறது. புலனாய்வு ஊடகவியலின் ஒரு பலமான ஆயுதமாக ஆர்ரிஐ இருப்பதை பரந்த கணிப்பைப் பெற்ற கதைகள் நிரூபித்துள்ளன. எனவே ஊடகவியலாளர்களுக்கு ஆர்ரிஐ மிக முக்கியமானது.

ஆர்ரிஐ இனைப் பின்பற்றுவதால் ஊடகவியலாளர்களுக்கு அடிப்படையில் மூன்று நன்மைகள் உள்ளன.

நம்பிக்கையும் துல்லியமும்.
ஒரு ‘நல்ல கதை’.
சமூக பெறுமானம்.

ஆர்ரிஐ கோரிக்கைகளினூடாக, தகவலுக்காகவும் செய்திகளுக்காகவும் நம்பகத்தன்மையானதும்,உத்தியோக பூர்வமானதுமான மூலங்களை ஊடகவியலாளர்களால் பெறமுடியும். அத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருக்கின்ற தகவலைப் பலப்படுத்தவும், அதனுடன் மேலதிக உண்மைகளையும், புள்ளிவிபரங்களையும், விபரங்களையும் சேர்த்துக்கொள்ளவும் அதைப் பயன்படுத்தலாம். ஊடகவியலாளர்கள் தங்களது கதைகளை, அறிக்கையிடல்களை அதிக பக்கசார்பற்ற தன்மையுடனும் பொறுப்புவாய்ந்த முறையிலும் செய்வதற்கும் அவர்களது கதைகள் நம்பிக்கைத்தன்மையுடன் இருப்பதற்கும் பாதுகாப்பான ஆவண நிரூபணங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கு இந்த ஆர்ரிஐ சட்டம் அவர்களுக்கு உதவும். மேலும், ஊடகவியலாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி உயர் திறனை உறுத்திப்படுத்தும் அதேவேளை மொழித் தடைகளை நீக்குவதற்கும் இது உதவும். இன்னும் மேலதிகமாக, வீண்விரயமாகும் பொது நிதிகள், ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான புலனாய்வுக் கதைகளுக்கு ஆர்ரிஐ ஊடகவியலாளர்களுக்கு உதவும். இந்தப் போக்குகள், அரசை கண்காணித்துக்கொண்டிருக்கின்ற செயற்பாடான ஒரு நம்பகமான ஜனநாயக ‘காவல் நாயாக’ (‘watchdog’)   ஊடகங்களின் புகழுக்கு பலம் சேர்க்கும்.