தகவல் அலுவலர்களும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களும

தகவல் அலுவலர்கள் என்போர் யார்?

+

ஓவ்வொருபொது அதிகார சபையூம் ஒரு தகவல் அலுவலரைக் கொண்டிருக்க வேண்டும். சில வேளைகளில் சில பொது அதிகார சபைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் அலுவலர்களும் காணப்படுவர்.

தகவல் அலுவலர்களின் கடமைகள் என்ன?

+

• தகவல் அலுவலர்கள், அவர்களது அலுவலகங்களுக்கு கிடைக்கும் தகவலறியூம் கோரிக்கைகளைக் கையாளுகின்றனர். அவர்கள் தகவல் கோரும் பிரசைகளுக்கு இயலுமான சகல  வழிகளிலும் உதவ வேண்டும்.

• இந்தச் சேவைகளை வழங்குகையில்இ தகவல் அலுவலர்கள் அவர்களது சக அலுவலர்களின் உதவி தேவைப்படுமிடத்து, சக அலுவலர்கள்  தகவல் அலுவலர்களுக்கு உதவூவது கட்டாயமாகும்.

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் என்போர் யார்

+

நீங்கள் தகவல் அலுவலரினது தீர்மானத்தில் திருப்தியூறாவிட்டால்இஅந்தப் பொது அதிகார சபையிலிலுள்ள பிறிதொரு அலுவலரிடம் அத்தீர்மானம் தொடர்பாக மேன்முறையீடு செய்யலாம். அந்த அலுவலர் ‘குறித்தளிக்கப்பட்ட அலுவலர்” என்று அழைக்கப்படுவார். குறித்தளிக்கப்பட்ட அலுவலHஇ தகவல் அலுவலருக்கெதிரான மேன்முறையீட்டினைக் கேட்டு ஒரு முடிவினை வழங்குவார

தகவல் அலுவலர் நியமிக்கப்படும் வரையில், அவ்வவ் பொது அதிகார சபைகளின் தலைவர்கள் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர்கள் தகவல் அலுவலர்களாகப் பதிற் கடமையாற்றுவார்கள்.

நீங்கள் எவ்வாறு ஒரு தகவல் அலுவலரை அல்லது குறித்தளிக்கப்பட்ட அலுவலரைத் தொடர்பு கொள்வீர்கள்?

+

நீங்கள் தகவல் அலுவலரை அல்லது ஒரு குறித்தளிக்கப்பட்ட அலுவலரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், நீங்கள் தொடர்பு கொள்ளும் தகவல்களைக் குறித்த பொது அதிகார சபைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள்இ தகவல் அலுவலரினதும் குறித்தளிக்கப்பட்ட அலுவலரினதும் தொடர்பு கொள்ளல் விபரங்களை ஒவ்வொருபொது அதிகார சபைகளினதும் வளவூகளில் துலாம்பரமான இடங்களில் காட்சிப்படுத்துள்ள தகவல்களிலிருந்தும் அவர்களது இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.