இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைப் பற்றி (எஸ்எல்பிஐ)

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைப் பற்றி (எஸ்எல்பிஐ)

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது (எஸ்எல்பிஐ), ஊடகம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வழிகாட்டுதல், தலைமைதாங்குதல் ஆகியவற்றுக்காக இலங்கை பத்திரிகை சமூகம், இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம்,சுதந்திர ஊடக அமைப்பு, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டது. அது சுயகட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் ஊக்கப்படுத்தவும், சரியான அறிக்கையிடலுக்கு அல்லது சவாலுக்கு வாசகர்களுக்கு இருக்கும் உரிமையை வழங்குவதற்காகவும் இலங்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவையும் (Press Complaints Commission of Sri Lanka (PCCSL)) அதே நேரம், தொழில் வாண்மைமிக்க ஊடகவியலுக்காக திறனை விருத்தி செய்வதை மையப்படுத்தி பயிற்சியளிக்கும் அங்கமாக இலங்கை ஊடகவியல் கல்லூரியையும் ( Sri Lanka College of Journalism (SLCJ)கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறலையும் பொறுப்பையும் கொண்டுள்ள ஊடகவியலாளர்களின் தொழில் வாண்மைமிக்க அலகு ஒன்றை உருவாக்கும் ஆணையைக் கொண்டுள்ளது.